Tuesday, January 03, 2006

பருக்கை

ஒரு காட்சியைப் பார்த்து அதனால் பிரமித்து அது நமக்குள் நிகழ்த்துகிற மாற்றத்தினால் கிளறப்பட்டு நமது தூரிகையில் நாம் ஒரு ஓவியம் தீட்டுகிறோமோ... அதைப் பற்றித்தான் பேசுகிறேன்.

அச்சுப் போன்று காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல்தான் படைப்பாளியின் மனம். அந்த ஈரத்தை வாழ்வின் உச்சக்கட்டமான வெப்பத்தின் மத்தியிலும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டியிருக்கிறது.
திரும்ப திரும்ப யோசித்தாலும் மிகச் சில விஷயங்கள்தான் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன.
ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறி விட்டது. எனது மாமா புன்னகையோடு சொன்னார். ..."இந்த பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம் !"

நான் வியப்பாக "ஏன் ?" என்றேன்.

"இந்த பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்துமேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில.. அப்படியினு எத்தனை இடங்கள் ! எங்கேயும் தவறாம அதனோட பயனுக்காக எவ்வளவு தூரம் கடந்து வந்திச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து கடைசி நொடியில தவறி விழுந்துடுச்சே.. எவ்வளவு பாவம் அது...!"

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரிடமிருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் !

- "சினிமாவும் நானும்" என்ற புத்தகத்தில் இயக்குநர் மகேந்திரன்

3 comments:

cheena (சீனா) said...

வேல்,

ஒரு கீழே விழுந்த பருக்கையைப் பற்றி என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை - இயக்குனர் மகேந்திரன் ஒரு நல்ல இயக்குனர் மட்டுமல்ல்ல - சிறந்த கதாசிரியரும் கூட

shanevel said...

நாம் சின்ன விஷயங்கள் என்று நினைத்தவை எல்லாம் பெரிய சிந்தனையாக இயக்குனர் மகேந்திரன் எடுத்து.. தனது படைப்பை கனமாக, அதே சமயம் இயல்பாக கூறியிருந்தார்.

Unknown said...

romba nalla eruku heart touching